Rock Fort Times
Online News

பால்விலை உயர்வு கேட்டு சென்னை கோட்டை முன்பு முற்றுகை போராட்டம் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பை உப தொழிலாக விவசாயிகள் செய்து வருகின்றனர். பால் உற்பத்தி மூலம், அவர்களின் அன்றாட செலவுக்கான, பொருளாதார தேவைகளை ஈட்டி வருகின்றனர். தற்போது கால்நடை வளர்ப்பு என்பது மிகவும் லாபம் தரக் கூடியதாக இல்லாமல், கடினமான வேலையாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்வதற்கு மாட்டுத் தீவனம் விலை, வேலை ஆட்கள் கூலி பலமடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் உற்பத்தியாளர்களுக்கு அரசு தரும் கொள்முதல் விலை போதுமானதாக இல்லை.. இந்த நிலையில் பால்கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க கோரி ஏற்கனவே பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். ஒரு லிட்டருக்கு ரூ.3 மட்டும் கொள்முதல் விலை உயர்த்தி பசும்பால் லிட்டர் 1-க்கு ரூ.35-ம், எருமைப்பால் லிட்டர் 1-க்கு ரூ.44-ம் தமிழக அரசு அறிவித்தது. பால் உற்பத்தி செலவை கணக்கிடும்போது, இவ்விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலையாக இல்லை. தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட பேராட்டங்கள் நடத்தியும், தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையே நீடிக்கிறது. எனவே பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று, இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பசும்பால் மற்றும் எருமைப்பால் கொள்முதல் விலையை, லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தி அறிவிக்க வேண்டுகிறோம். அப்படி அறிவிக்காவிட்டால், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்றுதிரட்டி, சென்னை கோட்டை முன்பு மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று  அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்