சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும் செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன்(காங்கிரஸ்) பேசியதாவது:
தமிழக மாநில மரமான பனை மரம், கருப்பட்டி, பதநீர் என்று இன்னும் நிறைய பயன்களை நமக்கு தருகிறது. இதிலிருந்து இயற்கையாக கிடைக்கும் பானத்தை பனம் பால் என்றும் கூறுவர். இதில் சுண்ணாம்பு கலந்தால் பதநீராக மாறுகிறது. தற்போது தமிழ் நாட்டில் பானங்கள் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. பனைமரங்களை வெட்ட தடை இருப்பது பாராட்டக்கூடிய விஷயம். பனை மரங்களை பாதுகாக்கும் நம் அரசின் முயற்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் பானங்கள் இறக்க விதிக்கப்பட்டு இருக்கும் தடையை நிரந்தரமாக நீக்கவேண்டும் என்று பேசினார்.

Next Post