Rock Fort Times
Online News

நாகர்கோவில்-தாம்பரம் இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாகர்கோவில் – தாம்பரம் இடையே (வ.எண்:06012) மாலை 4.35 மணிக்கு ஏப்ரல் 23,30-ந்தேதிகளில், மே மாதம் 5,7,14,21, 28-ந்தேதிகளில், ஜூன் மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளில் மற்றும் ஜூலை மாதம் 2-ந்தேதி இயக்கப்படுகிறது. தாம்பரம் – நாகர்கோவில் இடையே (06011) காலை 8.15 மணிக்கு ஏப்ரல் 24-ந்தேதி, மே மாதம் 1,8,15,22,29ந் தேதிகளில், ஜூன் மாதம் 12, 19, 26ந் தேதிகளில் மற்றும் ஜூலை மாதம் 3ந் தேதி இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் சென்னை எழும்பூர் இடையே (06044) இரவு 7.40 மணிக்கு மே மாதம் 3,10,17,24,31-ந்தேதிகளில், ஜூன் மாதம் 7,14,21, 28-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் இடையே (06043) மதியம் 2.25 மணிக்கு மே மாதம் 4,11,18,25ந் தேதிகளில், ஜூன் மாதம் 8,15,22,29-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது. தாம்பரம் – நெல்லை இடையே (06031) இரவு 10.30 மணிக்கு ஏப்ரல் 26-ந் தேதி மற்றும் மே மாதம் 3,10,17,24-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது. நெல்லை – தாம்பரம் இடையே (06032) மதியம் 1.15 மணிக்கு ஏப்ரல் 27-ந்தேதி மற்றும் மே மாதம் 4,11,18,25-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது. தாம்பரம் – நாகர்கோவில் இடையே (06039) இரவு 7.30 மணிக்கு ஏப்ரல் 28ந் தேதி மற்றும் மே மாதம் 5,12,19,26ந் தேதிகளில் இயக்கப்படுகிறது. நாகர்கோவில் – தாம்பரம் இடையே (06040) மாலை 4.15 மணிக்கு ஏப்ரல் 22,28ந் தேதிகளில் மற்றும் மே மாதம் 6,13,20,27-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்