தமிழ்நாட்டில் உள்ள 18 சைவ மடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் தொண்டை மண்டல ஆதீன மடத்தின் 234- வது சன்னிதானம் தேர்வு மற்றும் பதவியேற்பு விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், 234 -வது ஆதீனமாக ச. நாகராஜன் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு தொண்டை மண்டல முதலியார் சங்க தலைவர் எஸ். இசக்கி, பொதுச் செயலாளர் ஜே. சுகுமாரன், ஆலோசனை குழு தலைவர் கே.விஜய ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆதீனமாக பொறுப்பேற்ற நாகராஜன் இனிவரும் காலங்களில் சொத்துக்களை நிர்வகிக்கும் பணியிலும், ஆன்மீகப் பணியிலும் ஈடுபடுவார். இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆதீனமாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட நாகராஜன், 15- 6-1960 இல் பிறந்தார். எம்.ஏ. வரலாறு, எம்.ஏ.தமிழ் மற்றும் டிப்ளமோ சைவ சித்தாந்தம் படித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர், மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பணிபுரிந்தார். பணி ஓய்வுக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக குட்லாடம்பட்டி
ஸ்ரீரமணாலயம் ஆசிரமத்தில் சேவை புரிந்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.