திருச்சி காவிரி ஆற்றின் நடுவே ஆங்காங்கே மணல் மேடுகள் உள்ளன. அந்த மணல்மேட்டில் வளர்ந்துள்ள நாணல் புற்களுக்கு நடுவே சிலர் அமர்ந்து மது அருந்துவதும், போதை பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் செல்லும்போது நாணல் புற்களுக்கு தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். அந்தவகையில் இன்று( செப்.23) மர்மநபர்கள் யாரோ நாணல் புற்களுக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். கரையில் இருந்தவர்கள் காவிரி ஆற்றின் நடுவில் தீ கொளுந்துவிட்டு எரிவதை பார்த்ததும் ஓடிச் சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.