பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை ஸ்ரீரங்கத்தில் இன்று மாலை தொடங்கினார்.ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் நான்கு கால் மண்டபத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கி, திருவானைக்காவல் தெப்பக்குளம் மேம்பாலம் வழியாக தேவி தியேட்டர் திருவரங்கம் பேருந்து நிலையம் வழியே ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பாதயாத்திரை நிறைவுற்றது.





மேலும் கட்சித் தொண்டர்கள் ஆங்காங்கே மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் கட்சி தொண்டர்களிடையே அண்ணாமலை செல்பி எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர், சிறப்பு விருந்தினர் ஆசிர்வாதம் ஆச்சாரியார், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், சிவசுப்பிரமணியன், இல. கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார் ,ஒண்டி முத்து, விவசாய அணி மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜ் ,மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் வெங்கடேசன் ,அழகர்சாமி, திருச்சி சூர்யா சிவா, சதீஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் இந்த நடை பயணத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.