முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று மற்றும் பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர், அங்குள்ள மாவட்ட கலெக்டர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்துத் துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்குவார் என தமிழக அரசு தொிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.