திருச்சி, உறையூரில் ரூ.3 கோடியில் அமைய உள்ள “முதல்வர் படைப்பகம்”… * அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்!
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் மாநகராட்சி நிதியின் கீழ் முடிவுற்ற பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று(05-09-2025) திறந்து வைத்தார். மேலும், புதிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். அந்தவகையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 9, உறையூர் மருத்துவமனை பகுதியில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ.305 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள “முதல்வர் படைப்பகம்” கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் லி. மதுபாலன் , நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.