பிரபல திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனிக்கு லாரா, மீரா என இரண்டு மகள்கள் உள்ளனா். அவா்களில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மீரா, மன அழுத்தம் காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாா். சென்னை சர்ச் பார்க் கான்வெண்ட் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் மீரா. சிறுது நாட்களாகவே மீரா மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. வழக்கம் போல் நேற்று மீரா, இரவு உறங்கச்சென்றார். இன்று ( 19.09.2023 ) விடியற்காலை 3 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள அவரது வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே மீரா இறந்து விட்டதாக கூறியதின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தின்போது நடிகர் விஜய் ஆண்டனி வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகளின் இறப்பு தென்னிந்திய திரைப்பட வட்டாரத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.