திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாரதப் பிரதமர் மோடி எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழின் தொன்மையையும், பெருமையையும் எடுத்துக் கூறி வருகிறார். மத்திய அரசு எந்த நிதியும் தரவில்லை என தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழாவிற்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடி அங்கு ரூ.4500 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு பணிகளை துவக்கி வைக்கிறார். ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் ஆயிரக்கணக்கான படைகளை கொண்டு போரிட்டு வெற்றி பெற்று உலகெங்கும் தனது புகழை நிலை நாட்டியவர். அத்தகைய பெருமை வாய்ந்த ராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஆடி 23 அன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அரியலூர் வருகிறார். தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதே திருவள்ளூர் மாவட்டத்தில் 3 பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் தலை விரித்தாடும் கஞ்சா, மது போதை பழக்கத்தால் இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறுகிறது. சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாநில துணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன், திருச்சி பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Comments are closed.