Rock Fort Times
Online News

திருச்சி தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பஸ்கள் இயக்கம் …

மாநகர போலீஸ் கமிஷனா் காமினி தொடங்கி வைத்தாா்..

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 12-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதையடுத்து திருச்சியில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்காக மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள சோனா மீனா திரையரங்கம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது
அதேபோல் மதுரை மற்றும் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்காக மன்னார்புரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து அங்கிருந்து இயக்கப்பட உள்ளது. மன்னார்புரத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை மாநகர காவல்துறை ஆணையர் என்.காமினி ஐபிஎஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) சங்கர், நகர கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், மற்றும் துணை மேலாளர் (தொழில்நுட்பம்) கார்த்திகேயன், புறநகர் கோட்ட மேலாளர் யேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று ( 09.11.2023 ) முதல் 15-ந் தேதி வரை செயல்படும் இந்த தற்காலிக பேருந்து நிலையங்களில், பயணிகள் வசதிக்காக மின்விளக்குகள், கழிவறை, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்