Rock Fort Times
Online News

பொதுமக்கள் புகார் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ திட்டம்: விரைவில் தொடக்கம்…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் புதிதாக அமைக்கப்படுகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக 155340 என்ற மைய அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ம் தேதி தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், இப்போது வேறு தேதிக்கு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான பணிகள் விரைவாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்