திருச்சியில் சினிமா போல் சம்பவம்: வியாபாரியை அாிவாளால் மிரட்டி ரூ.37.50 லட்சம் பறிப்பு…
மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...
திருச்சி மார்க்கெட் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் கிருஷ்ணகுமார். இவர் வியாபாரத்தின் மூலம் வசூலான பணத்தை வங்கியில் கட்டுவதற்காக ஆட்டோவில் இன்று ( 12.09.2023 ) மதியம் சென்று கொண்டிருந்தார். ஆட்டோ தலைமை தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவா்களை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் ஆட்டோவை வழிமறித்தனா். உடனே சுதாாித்துக் கொண்ட ஆட்டோ டிரைவா், ஆட்டோவை திருப்பி வேகமாக ஓட்ட முயன்றாா். அப்போது அந்த மா்ம நபா்கள் ஆட்டோவை அாிவாளால் வெட்டினா். இதனால் ஆட்டோ அங்கும் இங்குமாக சென்று நின்றது. அப்போது அந்த மா்ம நபா்கள் கிருஷ்ணகுமாரை அாிவாளை காட்டி மிரட்டி, பணத்தை கொடுத்துவிடு, இல்லையென்றால் வெட்டிக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனா். இதனால் பயந்து போன கிருஷ்ணகுமாா் பையில் வைத்திருந்த ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்தை அவா்களிடம் கொடுத்தாா். அந்த பையை பறித்துக் கொண்ட அவா்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனா். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசில் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். சினிமா பாணியில் ஆட்டோவை விரட்டி வந்து பணத்தை பறித்து சென்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.