திருச்சி பொன்மலைப்பட்டி முல்லை நகர் 7வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் எபினேசர் (28). இவர், மோட்டார் சைக்கிளில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் தேசிய கல்லூரி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் எபினேசர் தலையில் பலத்த காயமடைந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி திருச்சி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எபினேசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.