Rock Fort Times
Online News

‘கூகுள் பே’ மூலம் நடக்கும் பணப் பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும்…* தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்..!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூகுள் பே மூலம் நடக்கும் பணப் பரிமாற்றங்கள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரியும், ஐஏஎஸ் அதிகாரியுமான அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ச்சனா, தமிழ்நாட்டில் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையில் பிடிபடும் பணம், பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லையெனில் பறிமுதல் செய்யப்படும். இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனையில் நேற்று மாலை முதல் இதுவரை 1.26 கோடி மதிப்பிலான ஆவணங்களற்ற பணம் மற்றும் பொருட்கள் பிடிபட்டுள்ளன. பெரிய அளவிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும். குறிப்பாக கூகுள் பே மூலம் நடக்கும் பணப் பரிமாற்றங்கள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். எவ்வளவு தொகைக்கு மேல் பரிவர்த்தனை இருந்தால் கண்காணிக்கப்படும் என குறிப்பிட முடியாது. ஆனால் bulk amount பரிவர்த்தனை இருந்தால் கண்காணிக்கப்படும். 23 அமைப்புகள் அதில் ஈடுபடுகின்றன. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடலாம். ஆன்லைன் பிரச்சாரங்களுக்கு அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்