திருச்சியில் மத்திய மந்திரி அஜய் பட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போதுஅவர் கூறியதாவது:
மத்திய அரசு தொடர்ந்து வேலை வழங்கும் பணியை செய்து வருகிறது. இளைஞர்களுக்கு தொழில் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஸ்டார்ட் அப்களும் தொடர்கின்றன. ஒரு காலத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை மட்டுமே நமது இளைஞர்கள் நம்பி இருந்த நிலையில் தற்போது இந்தியாவிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். ஒரு காலத்தில் மற்ற நாடுகளை நம்பி இருந்த நிலையில் தற்போது இந்தியாவை மற்ற நாடுகள் நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, 25வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது .இது சுய சார்பு இந்தியா என்பதற்கான வலிமையை சேர்த்துள்ளது. ரஷ்யா- உக்ரேன் போர் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் சீர்குலைவை சந்தித்தது. ஆனால் அதையும் தாண்டி, இந்திய பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையில் பிரதமர் மோடி வைத்துள்ளார் என்று கூறினார்.
Next Post
