திருச்சி ஸ்ரீரங்கம், கீழ உத்தர வீதியில் வசிப்பவர் மதுசூதனன் இவரது மகன் ஸ்ரீனிவாசன் வயது 10 இவர் அங்குள்ள மடத்தில் வேதம் பயின்று வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை 4 மணி முதல் வெளியில் சென்ற சிறுவன் மீண்டும் வரவில்லை என்று கூறப்படுகிறது இந்த சிறுவனை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர் இந்நிலையில் இன்று மாலை கொள்ளிடம் ஆற்றில் சிறுவன் சடலம் ஒன்று மிதப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கடந்த 23ஆம் தேதி காணாமல் போன சிறுவன் சீனிவாசன் என்று தெரியவந்தது சிறுவனின் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது மேலும் சிறுவனின் மரணம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments are closed.