Rock Fort Times
Online News

திருச்சியில் மைனர் மாணவி கருக்கலைப்பில் உயிரிழப்பு ? – தவறிழைத்த டாக்டர் உள்ளிட்டவர்களை காப்பாற்ற பெரும் முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி கலா, வயது 17. (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

பெற்றோரை இழந்த இவர் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். திண்டுக்கல் காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இவர் டிப்ளமோ படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு கலாவை பார்ப்பதற்காக அவரது அத்தை கல்லூரி விடுதிக்கு சென்றார்.

அப்போது அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை பார்த்து அவர் சந்தேகம் அடைந்தார். பின்னர் கலாவை அழைத்து சென்று அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் . அப்போது டாக்டர்கள் பரிசோதித்ததில் கலா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவின் அத்தை சிறுமியிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது,

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்த தனது காதலன் ராம்குமார் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் என தெரிவித்தார். இந்த வாலிபர் காந்திகிராம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கலாவை தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரை கற்பழித்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கலாவின் கர்ப்பத்தை அவரது அத்தை கலைக்க முடிவு செய்தார். அதன்படி திருச்சி உறையூரில் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள சுதர்சன் மருத்துவமனையில் அவரை இரு தினங்களுக்கு முன்பு சேர்த்துள்ளதாக தெரிகிறது. பின்னர் டாக்டர்கள் அந்த மாணவிக்கு சிகிச்சை அளித்து கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. கருக்கலைப்பு செய்யப்பட்ட அந்தப் பெண்ணுக்கு

பல மணி நேரமாகியும் உதிரப்போக்கு நிற்கவில்லை. அதனால் நாங்கள் இதற்கு மேல் சிகிச்சை அளிக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கருக்கலைப்பு செய்யப்பட்ட மைனர் மாணவியை, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மைனர் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரம் போலீஸ் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நளினி மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான ராம்குமாரை கைது செய்துள்ளார். ஆனால் கருக்கலைப்பு செய்த டாக்டரை, செவிலியர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்