திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் உற்சாக வரவேற்பு…!
திருச்சி மற்றும் கும்பகோணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், காடுவெட்டி தியாகராஜன், இனிகோ இருதயராஜ், துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு முதல்வரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

Comments are closed.