திமுக கழக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 13.03.2023 திருச்சிக்கு வருகை தர உள்ளாா். இதையொட்டி திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூா்,கிளைகழக நிா்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினா்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளா் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளா் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனா். மேலும் அன்று மாலை 4 மணி அளவில் திமுக இளைஞரணி புதிய நிா்வாகிகளை தோ்ந்தெடுக்க நோ்காணல் நிகழ்ச்சி, திருச்சி கலைஞா் அறிவிலயத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நோ்காணல் நிகழ்ச்சியில் இளைஞரணி பொறுப்பிற்க்கு விண்ணப்பித்த அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் என்று அந்த அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Prev Post