உலகமே வியக்கும் வண்ணம் கார் பந்தயத்தை நடத்தியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்- திருச்சி திமுக கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி புகழாரம்…!
திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகர திமுக சார்பாக, இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று(02-09-2024) நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,
உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு சென்னையில் கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி உள்ளார். கல்வி தொகையை மத்திய அரசு விடுக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க பார்க்கிறார்கள். தர வேண்டிய நிதியை கொடுக்க வேண்டும் என்றால் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எதிரிகளை ஓட, ஓட விரட்டும் பணியில் மாநகர பகுதியினர் செயல்பட வேண்டும். “கலைஞர் ஆர்மி” என்ற ஒரு அணியை உருவாக்கி உள்ளோம். இந்த பெயரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் பரிந்துரைத்தார். அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரத்தை வழங்கி விட்டோம் என்றால் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்று கூறினார்.
கூட்டத்தில், மாநகராட்சி துணைமேயர் திவ்யா தனக்கோடி, பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், தர்மராஜ், மோகன், பாபு, ராஜ்முகமது , விஜயகுமார், மணிவேல், சிவக்குமார், மாநகர கழக நிர்வாகிகள் நூர்ஜான், தமிழ்ச்செல்வன், சந்திரமோகன், பொன்செல்லையா, சரோஜினி மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட, கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழக்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*தலைமைக் கழக அறிவிப்பின்படி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 111 நிகழ்ச்சிகள் நடத்தியதற்காகவும், அதில் முத்தாய்ப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் கருணாநிதியின் திருவுருவச் சிலையினை நிறுவியமைக்காகவும் கழக தலைவரால் நமது மாவட்டக் கழகச் செயலாளர் பாராட்டப்பட்டார். கழகத்தின் மாவட்டச் செயலாளர் என்றால் மாவட்ட ஆட்சியருக்கு சமம்” என்ற புரவலர் அன்பில் தர்மலிங்கத்தின் முழக்கத்தை மேற்கோள் காட்டி மாவட்டக் கழகச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பாராட்டிய கழகத் தலைவருக்கு நன்றி தெரிவிப்பது.
*திருச்சி தெற்கு மாவட்டத்தில் திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் மதுரை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு அடுத்ததாக திருச்சியில் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ஒப்புதல் வழங்கிய முதல்- அமைச்சருக்கும், இந்நூலகத்தை திருச்சி மாவட்டத்திற்கு பெற்று கொடுத்த மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி க்கும் நன்றி தெரிவித்து கொள்வது.
*திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பாரளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகளை அளித்த வாக்காளர்களுக்கும், அதற்காக அல்லும், பகலும் உழைத்த மாவட்ட கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கிழக்கு மாநகர திமுக சார்பில் செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது.


Comments are closed.