கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் உயிரிழந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து அங்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்களிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறி, தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவியான, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது அவர் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்று கூறினார்.


Comments are closed.