Rock Fort Times
Online News

நில அபகரிப்பு  வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை…

கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலையாகியுள்ளார். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை என்றும், குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது. இதையடுத்து இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் விடுதலை ஆகியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்