Rock Fort Times
Online News

அமைச்சர் நாசரின் மனிதாபிமானம்! சாலையில் அடிபட்ட பசு மாட்டிற்கு உடனடி சிகிச்சை ஏற்பாடு!

ஆவடியில் உள்ள சாலையில் திடீரென ஒரு பசுமாடு அடிபட்டு துடித்துக் கொண்டிருந்தது. அங்குள்ள பொதுமக்களும் போலீஸ்சாரும் அந்த இடத்திற்கு வந்து அந்த பசு மாட்டை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர் .அந்த வழியாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் காரில் வந்து கொண்டிருந்தார்.இந்த காட்சியை கண்டதும் பதறிப்போன அமைச்சர் நாசர் அந்த இடத்தில் காரில் இருந்து இறங்கி நடந்த விபரத்தை கேட்டு அறிந்தார் .உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததோடு அந்த பசு மாட்டை வாகனம் மூலம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்தார். இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு அந்த இடத்தை விட்டு அமைச்சர் நாசர் புறப்பட்டு சென்றார் .அமைச்சர் நாசரின் மனிதாபிமானத்தை அங்குள்ள பொதுமக்கள் மனதார பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்