Rock Fort Times
Online News

தியாகி இம்மானுவேல் சேகரன் படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை….

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66 -ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செவந்திலிங்கம், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, போட்டோ கமால், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்