திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று ( 26.11.2023 ) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு தான் அணிந்திருந்த வெள்ளி கருங்காலி மாலையை அணிவித்தார். இது குறித்து அமைச்சர் பெரியசாமி கேட்டபோது, உங்களுக்குத்தான் அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போகுதே இதை போட்டுக் கொள்ளுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று பதில் அளித்தார் அமைச்சர் கே.என்.நேரு . அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு கருங்காலி மாலை போட்டுவிடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.