Rock Fort Times
Online News

திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் கே.என்.நேரு…!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்து, கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தேர்தல் பிரச்சாரம் செய்தார். பொன்மலை பகுதிக்குட்பட்ட வார்டு எண் 46-ல் பொன்மலைப்பட்டி ரைஸ் மில், கொட்டப்பட்டு,
மொராய் சிட்டி விஸ்தரிப்பு பகுதி, வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர் நகர், பொன்மலைப்பட்டி, உடையார் தெரு மற்றும் மலையடிவாரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா
மொழியை ஆதரித்து வீதி, வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்குக் சேகரித்தார். அப்போது  மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ், மாமன்ற உறுப்பினர் ரமேஷ், வட்டக் கழகச் செயலாளர்கள் முருகன், பரமசிவம் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் உடன் சென்று ஆதரவு திரட்டினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்