மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் நேற்று முன்தினம் இறகுப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பதில் ஏற்பட்ட சர்ச்சையால் அமைச்சரின் ஆதரவாளர்கள் எம் பி யின் வீடு மற்றும் கார் உள்ளிட்டவற்றை தாக்கினார்கள்.இந்தபிரச்சனையில் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் கே.என் நேரு இன்று எம்.பி திருச்சி சிவா வீட்டிற்கு வந்து எம்பி சிவாவிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். கே என் நேருவுடன்மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
