திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதி முழுதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர் இன்று( ஏப்.7) எடமலைப்பட்டி புதூர், காளியம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், முருகன் நகர், காதிகிராப்ட் காலனி மெயின் ரோடு, முத்து மாரியம்மன் கோயில் தெரு, அந்தோணியார் கோவில் தெரு, வடக்குத்தெரு, மேற்குத் தெரு, நல்ல தண்ணீர் கேணி தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அவருடன் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், கழக நிர்வாகிகள் முத்துச்செல்வம், காஜாமலை விஜய் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Comments are closed.