Rock Fort Times
Online News

துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!

திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில்
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், துறையூர் – முசிறி ரவுண்டானா முதல் பெரம்பலூர் மெயின் சாலை வரையிலான புறவழிச் சாலைகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட உயர் கோபுர சோலார் மின் விளக்குகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளையும் அமைச்சர் திறந்து வைத்தார். அப்போதுஅமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், இன்னும் 30 ஆண்டுகள் துறையூர் மற்றும் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். இத்துடன், பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவதால் பயணிகளுக்கு சிறந்த வசதிகள் கிடைக்கும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் பேரூராட்சிகளின் இயக்குனர் மா.பிரதீப்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கிரண் குராலா, திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் ந.தியாகராஜன், செ.ஸ்டாலின்குமார், சீ.கதிரவன், நகர்மன்றத் தலைவி இ.செல்வராணி, நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் தாணுமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் த.ராஜேந்திரன், நகர்மன்ற துணைத் தலைவர் ந.முரளி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்