திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு ரூ.37 கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்!
சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 16 அரசு துறைகளின் சார்பில் 2058 பயனாளிகளுக்கு ரூ.37 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரஞ்சித், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீராம் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.