Rock Fort Times
Online News

புதிதாக 8மாவட்டங்கள் அமைவது எப்போது? சட்டமன்றத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்!

எட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கான கோரிக்கைகள் வரப்பட்டுள்ளதாகவும் நிதி நிலைக்கு ஏற்ப அரசு ஆராய்ந்து முடிவுஎடுக்கும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை தலைமை இடமாக மாவட்டம் உருவாக்க அரசு முன்வருமா என்ற கேள்வியை முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எழுப்பினார். கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று திமுக கொறடா கோவை செழியன் கோரினார்.இரு கேள்விகளுக்கும் பதில் தகவல் அளித்த அமைச்சர் ராமச்சந்திரன், 8மாவட்டங்களை பிரிப்பதற்கும்,கோட்டாட்சியர் வட்டாட்சியர் மற்றும் அலுவலகங்களை பிரிப்பதற்கும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருப்பதாகவும், முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிதி நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆரணியை தலைமை இடமாகக்கொண்டு மாவட்டம் உருவாக்க போதிய சாத்தியக்கூறு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்