வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!
செக்கிழுத்த செம்மல், சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நிர்வாகிகள் இன்று (நவ.18) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாநகர செயலாளர், மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சபியுல்லா, மாவட்டக் கழக நிர்வாகி குணசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, பகுதி கழக செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், மோகன், ராஜ்முஹம்மத், மணிவேல், விஜயகுமார், பாபு மற்றும் மாநில மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.