Rock Fort Times
Online News

மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…* பெண்கள் திலகமிட்டு வரவேற்பு !

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொகுதி முழுவதும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இன்று ( ஏப்.7) தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பகவதிபுரம், பிரகாஷ் நகர், மலைக்கோவில், மாதா கோயில் தெரு, ஒன்றிய தெரு, கூத்தைப்பார் பேரூருக்கு உட்பட்ட திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று திமுக அரசின்
சாதனைத் திட்டங்கள் மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு தான் செய்த திட்டங்களை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் தங்களது வீட்டு வாசல்களில் வண்ணக் கோலமிட்டும், வெற்றி திலகமிட்டும் அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். வேட்பாளருடன் திருச்சி நகர கழக செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் சிவக்குமார், வட்டக் கழகச் செயலாளர்கள் சோமகுணாநிதி, அருண், பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு, கூத்தைப்பார் பேரூர் மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்