Rock Fort Times
Online News

234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆய்வு பயணம் மேற்கொண்டு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 2022-ம் ஆண்டு, அக்டோபர் 10 ம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள பயணத்தை தொடங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் ஆய்வு பயணத்தைத் தொடங்கிய அவர், அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருடன் சேர்ந்து ஆய்வில் ஈடுபட்டார். அவ்வப்போது தனது எக்ஸ் பக்கத்தில் பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் குறித்து எழுதி வந்தார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் பயணித்து 2024 நவம்பர் 14 அன்று முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஆய்வை நிறைவு செய்தார். இதற்கான ஆய்வு அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று(27-11-2024) வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்