திருச்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் கல்வித் திறனை சோதித்து பார்த்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
திருச்சி பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 91 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு பற்றி கேட்ட றிந்தார். பின்னர், பள்ளி மாணவர்களிடம் பாட புத்தகங்களை படிக்க சொல்லி கல்வியின் தரத்தை சோதித்துப் பார்த்தார். சரியாக படித்த மாணவர்களை பாராட்டி வரும் காலங்களிலும் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

ஆய்வை முடித்துக் கொண்டு புறப்பட தயாரான அமைச்சரிடம், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு போதிய கழிவறை வசதி இல்லை என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

Comments are closed.