பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், சபியுல்லா, பகுதிக்கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

Comments are closed.