Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 50 மற்றும் 65-வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார்…!

பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளிலும் முகாம் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 2, 50-வது வார்டு மக்களுக்கு பழைய அலுவலகத்திலும், மண்டலம் 4, 65- வது வார்டு மக்களுக்கு விமான நிலையம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று( செப்.9) நடைபெற்றது. முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதில் இரண்டு வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். இதில், தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு அதற்கான ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். மற்ற மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த முகாம்களில், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, கிழக்கு மாநகர திமுக செயலாளர் மற்றும் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், மண்டலம் 2-ன் தலைவர் ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர் ரிஸ்வான் பானு, திருச்சி கோட்டாட்சியர் அருள், வட்டாட்சியர் விக்னேஷ், துணை வட்டாட்சியர் கார்த்திகேயன், இணை ஆணையர் சண்முகம், மாநகராட்சி பொறியாளர் பக்ருதீன், பகுதி செயலாளர்கள் ராஜ் முகமது, மணிவேல், வட்ட செயலாளர் சீனிவாசன், ஞானசேகர், பன்னீர், சேகர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்