Rock Fort Times
Online News

திருச்சி என்.ஐ.டி-ல் படிக்க தேர்வான அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி…

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பள்ளிக் கல்வித்துறை சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், பயிலும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாக தமிழக வரலாற்றில் 274 அரசுப் பள்ளி மாணவர்கள் தலைசிறந்த முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் பயில தேர்வாகினர். அவர்களில் 35 மாணவர்கள் திருச்சி என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் பயில தேர்வாகினர். அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மடிக்கணினி வழங்கி பாராட்டினார். அப்போது திருச்சி என்.ஐ.டி.இயக்குநர் அகிலா , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்