Rock Fort Times
Online News

தியாகி இம்மானுவேல் சேகரனார் படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை …

தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இம்மானுவேல் சேகரனார் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில், திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் மற்றும் நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜன், லீலாவேலு, மூக்கன், நீலமேகம், ஜெகதீசன், சிந்துஜா, தனசேகரன், பழனியாண்டி, முத்தமிழ் கருணாநிதி மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் .

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்