அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் விழா: திமுக கவுன்சிலர் கே.கே.கே. கார்த்திக் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இன்று ( டிசம்பர் -2 ) பிறந்தநாள். இதனை யொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினரும், கழக நிர்வாகிகளும் அமைச்சரின் பிறந்தநாளை இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் திருச்சி 36-வது வார்டு திமுக கவுன்சிலர் கே.கே.கே.கார்த்திக் ஏற்பாட்டில் 36 மற்றும் 36 ஏ வட்டக்கழக திமுக சார்பில் அம்பிகாபுரம் எஸ்.எஸ்.எஸ். ஆசிரமத்தில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நேர்முக உதவியாளர் சேகர் அருண், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், பேக்குகள் ஆகியவற்றை வழங்கினார். அப்போது காட்டூர் பகுதி திமுக செயலாளர் ஓ.நீலமேகம், வட்ட செயலாளர்கள் ஆனந்த், சுரேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், சார்பு அணியின் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.