பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!
முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதியின் 102- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கருணாநிதி திருவுருவ சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
Comments are closed.