திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவளர்ச்சிப்பட்டி பகுதியில், விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை இங்கு கொண்டு வந்து அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நெல் கொள்முதல் நிலையத்தின் பணிகளை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், விவசாயிகளின் நலன் காக்கும் நோக்கில் இந்த கொள்முதல் நிலையம் முக்கிய பங்காற்றும் என்றும், இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.