திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ரெட்டிமாங்குடி கடைவீதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் கைப்பகுதி சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அதிமுகவினர் சிலை முன்பு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரி புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அவர்களிடம் லால்குடி டி.எஸ்.பி.அஜய் தங்கம் மற்றும் சிறுகனூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.