திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள்: மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் நடந்தது!
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவு தினம் இன்று( டிச.24) தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. அதேபோல திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் தலைமையில் திருவெறும்பூர், லால்குடி மற்றும் மணப்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சூரியூர் ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் ஏடிபி தொழிற்சங்க பொதுச் செயலாளருமான கார்த்திக், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி. கார்த்திக், கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், மகளிரணி, இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், எம்.ஜி.ஆர். வழியில் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Comments are closed.