செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி, அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். வயது 82. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது மறைவு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்து நிலையில், சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது அவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இறந்த பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும், ஜி.பி.செந்தில், ஜி.பி.அன்பழகன் என்ற மகன்களும் உள்ளனர். மேல் மருவத்தூரில் உள்ள கோவில் கருவறையில் பெண்களும் சென்று வழிபாடு நடத்தும் முறையை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார். அவரது ஆன்மீக சேவையை பாராட்டி கடந்த 2019ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.