Rock Fort Times
Online News

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி…!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியலில் ஆக்டிவ்வாக செயல்படும் அரசியல் தலைவர்களில் வைகோவும் ஒருவர். 80 வயதிலும் தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, போராட்டங்களில் பங்கேற்பது ஆகியவற்றை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. எனினும், இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை தரப்பிலோ, வைகோ தரப்பிலோ அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்