திருச்சி புத்தூர், உறையூர் சாலை ரோடு மற்றும் அண்ணா நகர், உழவர் சந்தை ஆகிய 3 அம்மா உணவகங்களில் மேயர் அன்பழகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு வழங்கப்படும் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம், ஆகியவற்றை சாப்பிட்டு பார்த்தார். பின்னர் அவர், பொது மக்களுக்கு சுவையாக உணவினை வழங்குமாறும், உணவகத்தை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுரை கூறினார்.ஆய்வின்போது மண்டலக்குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி செயற் பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் கவுன்சிலர்கள் விஜயா ஜெயராஜ், எஸ்.விஜயலட்சுமி, பைஸ் அகமது மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.



Comments are closed, but trackbacks and pingbacks are open.