Rock Fort Times
Online News

திருச்சி கோளரங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறி தேர்வு… 

திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கமானது மாணவ சமுதாயம் பயன்பெற வேண்டி அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி, வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி கணித திறனறி தேர்வை பள்ளி மாணவர்களுக்கு நடத்த உள்ளது. அன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவியல் மையம்- கோளரங்க வளாகத்தில் நடைபெறும் இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவ மாணவிகள் டிசம்பர் மாதம் 1ம் தேதிக்குள் நுழைவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் . 5, 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். இதில் சிறப்பிடம் பெரும் மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-வது பரிசாக 2 பேருக்கு ரூ.1000, 3-வது பரிசாக 3 பேருக்கு ரூ.500 மற்றும் ஆறுதல் பரிசாக 20 பேருக்கு ரூ.250 வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை திருச்சி அண்ணா அறிவியல் மைய திட்ட இயக்குனர் அகிலன் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்