Rock Fort Times
Online News

சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள் மருது சகோதரர்கள்- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு…

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் நினைவு தின விழா திருச்சி என்.ஆர்.  ஐஏஎஸ் அகாடமி வளாகத்தில் இன்று ( 23.10.2023 ) சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியினை திருச்சி என்.ஆா்.  ஐஏஎஸ் அகாடமி மற்றும் ஜம்புத் தீவு பிரகடன ஒருங்கிணைப்புக் குழு இணைந்து நடத்தியது. இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் என்.ஆர்.  ஐஏஎஸ் .அகாடமி இயக்குனர் ஆா். விஜயாலயன் வரவேற்று பேசினாா். மருது சகோதரர்கள் படத்தினை கவர்னர் ஆர்.என் ரவி திறந்து வைத்தார்.விழாவின் சிறப்பு விருந்தினா்களாக ஜம்பு தீவு பிரகடன விழா ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா்கள் ஆா்.கற்பூர சுந்தரபாண்டியன் ஐ.ஏ.எஸ்., கே.எஸ்.முத்துராமன், ராதா, குருசாமி மயில்வாகனன், மதுசூதன பெருமாள் கலந்து கொண்டனா்.

விழாவில் தமிழக கவர்னர் ஆர் .என்.ரவி. பேசியதாவது:-

மருது சகோதரர்கள் சுதந்திரத்திற்காக அவர்கள் வாழ்வையே அர்ப்பணித்தார்கள். சுதந்திரத்திற்கான முதல் பிரகடனத்தை வெளியிட்டார்கள். அதை ஸ்ரீரங்கம் கோவிலில் ஒட்டினார்கள். நாட்டில் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் அவர்களது தியாகங்கள் அடுத்த தலைமுறைக்கு நினைவுபடுத்தக்கூடிய பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.அது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகம் புண்ணிய பூமி.  இங்கு ஏராளமான ரிஷிகளும், முனிகளும் வாழ்ந்துள்ளார்கள். “எந்நன்றி கொண்டாருக்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நாமும் இந்திய சுதந்திரத்திற்கு அயராத பாடுபட்ட மருது சகோதரர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.மேலும் தமிழ்நாட்டில் சுந்தந்திர போராட்ட வீரர்கள் குறித்து ஆராய்ச்சி மாணவர்கள் யாரும் ஆய்வு செய்வதில்லை. அது எனக்கு வருத்தமாக உள்ளது. வருங்கால தலைமுறையினர் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக என்.ஆர். ஐஏஎஸ்  அகாடமி இயக்குனர் ஆா். விஜயாலயன் பேசியதாவது:-
சிவகங்கை சிங்கம் சின்ன மருது, பெரியமருது சகோதரர்கள் தான் சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகள். தமிழகத்தைச் சேர்ந்த மருது சகோதரர்கள், பூலித்தேவன், வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள். இவர்களைப் போன்ற பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தத்தால் தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக முதன் முதலில் ஜம்புத்தீவு பிரகடனம் செய்தவர்கள் மருது சகோதரர்கள் தான். ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராக திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் கோவில் போன்ற இடங்களில் போஸ்டர் ஒட்டியவர்கள் இவர்கள்தான். அவர்களின் தியாகத்தை வீரத்தை போற்றி பாதுகாப்போம். இங்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு கவர்னர், ஆர்.என்.ரவி நேர்மையான ஒரு ஐபிஎஸ் அதிகாரி. கேரளா, நாகலாந்து போன்ற பிற மாநிலங்களில் போலீஸ் அதிகாரியாகவும், கவர்னராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். தற்போது தமிழகத்தில் கவர்னராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் அவர் ஒரு கலக்கல் கவர்னராக இருக்கிறார் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு அவரது பணிகள் திறம்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இவ்விழாவில் சமூகத்திற்கு பல்வேறு நிலைகளில் தொண்டாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிவகங்ககை டி.ராமசாமி சோ்வை, முன்னாள் காவல் அதிகாாி வி. மாணிக்கம் , வரலாற்று ஆய்வாளர் பழனி எஸ். பாலமுருகன் , பார்வார்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவரும் சமூக ஆா்வலருமான கே.சி. திருமாறன், சமூக ஆர்வலர் சிவகங்கை பி.வெங்கேடசன், காஞ்சிபுரம் பி. செந்தில்நாதன், தலைவர் மற்றும் தமிழ்நாடு அஸ்தெடோ அகடா சங்கத்தின் தலைவர், தமிழக தலைமை அகமுடையார் சங்கம் தலைவா் தஞ்சாவூா் ஸ்ரீபதி செந்தில்குமாா், மதுரை பி. போதிராஜ் அக்டோபா் 27 தலைமை அமைப்பாளா், மதுரை தினகரன் ஜெய் ஆவணப் பட எழுத்தாளா், திருமங்கலம் எம். சக்திகணேஷ் சமூக ஆா்வலா், அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவை தலைவா் மதுரை எஸ்.ஜெயமணி , சிவகாசி இருளப்பன் அய்யனாா் ஸ்வயம் சேவக் சமூக ஆா்வலா், சமூக ஆா்வலா்கள் புதுவை என.டி.எஸ் சுந்தாி , கோவை ஜி.ஆா். ஜலேந்திரன் , முன்னாள் ராணுவ வீரர் டி. அய்யப்பன், IOB, PNB வங்கி குழு உறுப்பினா் டி.ரகு ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

         

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்